×

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு!!

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். டிட்வா புயல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 1601 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 582 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தமிழ்நாட்டில் டிட்வா புயல், மழையால் 2.11 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். எதிர்பார்ப்புக்கு மாறாக சென்னை அருகிலேயே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. நாளை காலை வரை சென்னை அருகேயே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை காலை வரை இதேபோன்று விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் சராசரியாக 15 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் எண்ணூரில் 26 செ.மீ., பாரிமுனையில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது.

பாரிமுனை 25 செ.மீ., ஐஸ் அவுஸ் 22 செ.மீ., மணலி புதுநகர், பொன்னேரியில் தலா 21 செ.மீ. மழை பெய்துள்ளது.மாமல்லபுரம் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தது. சென்னையில் மட்டும் 11 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும்.

தூத்துக்குடி, தஞ்சாவூரில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 85,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருக்கும் என்று தற்போதைக்கு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு கணக்கெடுப்பு முடிந்த உடனே நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நீர் முழுவதும் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து சரியான கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் தரப்படும். சரியான கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார்.

Tags : Minister ,K. K. S. S. R Ramachandran ,Chennai ,Tidwa Storm ,Tamil Nadu ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...