- இலங்கை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- இலங்கை
- புயல் டிட்வா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நுவரெலியா...
சென்னை: இலங்கையில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளனர். டிட்வா புயலால் பெய்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் இலங்கையில் இதுவரை 330 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கைக்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 பேர் நுவெரலியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கினர். நிலச்சரிவில் சிக்கி 3 நாட்களாக பேருந்திலேயே இருந்துள்ளனர்.
நுவெரலியாவில் சுற்றுலா பயணிகள் சிக்கியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில் தொண்டைமானுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் அனைவரையும் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்திருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டைமான் முயற்சியால் 30 பேரும் மீட்கப்பட்டு. தமிழ்நாடு அரசின் பெரு முயற்சியால் இன்று காலை சென்னை திரும்பினர். இலங்கையில் இருந்து திரும்பிய 30 பேரும் சென்னை விமான நிலையில் பேட்டி அளித்து வருகின்றனர். அதில், சென்னை முகப்பேரைச் சேர்ந்த நாங்கள் கடந்த 25ம் தேதி இலங்கை புறப்பட்டு சென்றோம். முதல் நாள் இரவிலேயே பலத்த மழை பெய்தது.
நுவெரலியா பகுதிக்கு செல்லும்போது நானுவாயோ என்ற கிராமத்தில் சிக்கிக் கொண்டோம். பெண்கள் அருகில் இருந்த ரயில்வே குடியிருப்பில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். ஆண்கள் எல்லோரும் பேருந்திலேயே தங்கி இருந்தோம். நுவெரலியாவில் நாங்கள் சிக்கியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில் தொண்டைமானுக்கு தகவல் தெரிவித்தார். செந்தில் தொண்டைமான் எங்களை தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளையும் செய்தார் என தெரிவித்தனர்.
