- Edapadi
- டிடீவி
- தினகரன் கதம்
- திருமங்கலம்
- எடப்பாடி பழனிசாமி
- தின மலர்
- மதுரை மாவட்டம்
- திருமங்கலத்
- விவகாரச் செயலாளர்
திருமங்கலம்: எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்திற்கு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இறுதித் தீர்ப்பு எழுதப்படும் என டிடிவி.தினகரன் கூறினார்.மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், அமமுக பொதுசெயலாளர் டிடிவி.தினகரன், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2017ல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, 18 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் எடப்பாடி அவர்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சியை தக்கவைத்து கொண்டார்.
பின்னர் 18 எம்எல்ஏக்களையும், தொகுதி மக்களிடம் கேட்டுத்தான் அவர் தகுதி நீக்கம் செய்தாரா? தற்போது கோபி செட்டிபாளையத்தில் மட்டும், செங்கோட்டையன் மக்களிடம் கேட்க வேண்டும் என்கிறார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், எடப்பாடியின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும். எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டவிதிகளை எல்லாம், சில கைத்தடிகளை வைத்து தனக்கு சாதகமாக மாற்றினார்.
இந்த மாற்றத்தை அதிமுக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுத்தான் செய்தாரா என்ற கேள்வி எழுகிறது. இன்றைய நிலையில், அதிமுகவை இல்லாமல் செய்துவிட்டு, இரட்டை இலை சின்னத்தை கையில் வைத்துள்ள அகம்பாவத்தில், பணத்திமிரில் எடப்பாடி பேசி வருகிறார். அவரது மகன், மைத்துனர், சகலை போன்றவர்கள்தான் இன்று கட்சியை நடத்துகின்றனர். தொண்டர்கள் தூங்குவது போல் நடித்தாலும் வரும் தேர்தலில் விழித்துக்கொண்டு சரியான தீர்ப்பை வழங்குவார்கள். இவ்வாறு கூறினார். ‘‘ஓபிஎஸ் வரும் 15ம் தேதி வரை எடப்பாடிக்கு கெடு விதித்துள்ளது’’ குறித்து கேட்டபோது, ‘‘அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்றவர், யாருடன் கூட்டணி என கேட்டபோது, ‘‘பல்வேறு கட்சிகள் பேசி வருகின்றன’’ என்றார்.
