ஹாங்காங்: ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலியானவர்களுக்கு உதவி அளிக்க ரூ.1029 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. ஹாங்காங்கில் உள்ள தாய் போ பகுதியில் .ள்ள வாங் பெக் குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 151 பேர் பலியாகியுள்ளனர். 79 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 104 பேரை இன்னும் காணவில்லை. ஹாங்காங்கில் கடந்த 70 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான தீ விபத்து இது. தீயணைப்பு வீரர்கள் 40 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீ பரவுவதற்கு பிளாஸ்டிக் நெட்டிங், எரிபொருள் தன்மை கொண்ட பொருட்கள், மூங்கில் சாரம் ஆகியவை காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏராளமானோர் நன்கொடை அளித்து வருகின்றனர். இதுவரை ரூ.1029 கோடி நன்கொடை வந்துள்ளது. மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி மற்றும் புதிய வீடு கட்டுவதற்கான நிதியுதவிகளை அரசு வழங்க உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 683 பேர் ஓட்டல்கள், ஹாஸ்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1144 பேர் தற்காலிக குடியிருப்புகளில் குடியிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
