புதுடெல்லி: கடந்த மாத ஜிஎஸ்டி வசூல் விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த நவம்பர் மாதத்தில் 1,70,276 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. முந்தைய ஆண்டு ஆண்டு நவம்பரில் 1,69,016 கோடி வசூல் ஆகியிருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் முந்தைய ஆண்டை விட 4.6 சதவீதம் அதிகரித்து, ரூ.1.95 லட்சம் கோடி வசூலானது. கடந்த மாதத்தில் வசூல் குறைந்ததற்கு ஜிஎஸ்டி வரி குறைப்பும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் ரூ.14,75,488 கோடி வசூலானது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத வளர்ச்சியாகும்.
