- கவர்னர்
- மக்கல் மாலிகயா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- சிவகங்கை
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- நிலை
- பி.சண்முகம்
- டிட்வா புயல்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- மயிலாடுதுறை
சிவகங்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிவகங்கையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் டிட்வா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாகையில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலும் 4 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஈரப்பதம் கூடுதலாக இருக்கும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துவிட்டது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அரசு கூறும் நிவாரணத்தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.
கவர்னர் மாளிகையை மக்கள் மாளிகை என்று மாற்றியுள்ளார்கள். இதனால் எந்த பயனும் கிடையாது. கவர்னர் ரவி, தமிழ்நாடு மக்களுக்கு, தமிழ்நாடுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அவர் செயல்பட வேண்டும். மதுரை மற்றும் கோவை நகருக்கு மெட்ரோ ரயில் சேவை என்பது அவசியமான ஒன்றாகும். இதை நிராகரிப்பதை ஏற்க முடியாது. ஒன்றிய அரசின் செயல்பாடு தமிழகத்திற்கு விரோதமாக இருக்கிறது.
ஆட்சியில் பங்கு எப்போதும் கேட்க மாட்டோம். தேர்தலில் பாஜ – அதிமுக கூட்டணியை தோற்கடிப்பது தான் எங்களது முதன்மையான பணி. விஜய் கார் ெகாடுக்கிறேன், பைக் கொடுக்கிறேன் என்று சொல்வதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
