×

அக்டோபர் முதல் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

புதுடெல்லி: வருகிற அக்டோபர் முதல் மீண்டும் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் என ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், ”வருகிற அக்டோபர் மாதத்தில் 30கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அரசுக்கு கிடைக்கும். அடுத்த 3 மாதங்களில் 100 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். நாட்டில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையானது சுமார் 81கோடியை கடந்துள்ளது. கடைசி 10கோடி டோஸ்கள் 11 நாட்களில் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும். இந்தியாவின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தேவைக்கு போக அதிகமாக உள்ள தடுப்பூசி டோஸ்கள் அடுத்த காலாண்டில் (அக்டோபர்- டிசம்பர்) தடுப்பூசி மைத்ரி திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும். இந்தியாவின் தடுப்பூசி போடுதல் செயல்பாடு உலகநாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகும். இதில் இந்தியா மிக  வேகமாக முன்னேறி சென்றுகொண்டிருக்கிறது” என்றார்.* வீட்டுக்கு வீடு தடுப்பூசி வழக்கு ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்மாற்று திறனாளிகள் அமைப்பு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ”கொரோனாவால் மாற்றுத் திறனாளிகளுக்கு தான் பாதிப்பு அதிகம். அதனால் அவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பு ஊசி செலுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ”கொரோனா பரவல் காலத்தில் மாற்றுத் திறனாளிகள் நேரில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்வது சாத்தியமில்லை. இந்த விஷயத்தில் என்னவகை நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஆலோசனை வழங்க வேண்டு என்று கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தாவிடம் தெரிவித்த நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்….

The post அக்டோபர் முதல் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Manchuk Mandavia ,New Delhi ,Union Health Minister ,Mansukh Mandaviya ,Dinakaran ,
× RELATED கைது நடவடிக்கை சட்டவிரோதம் நியூஸ்...