×

நீதிபதிகள் மாறிவிட்டார்கள் என்பதற்காக தீர்ப்புக்களை தூக்கி எறியக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து

 

புதுடெல்லி: அரியானாவின் சோனிபட்டில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் நீதித்துறையின் சுதந்திரம் குறித்த சர்வதேச மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கலந்து கொண்டு பேசுகையில், ‘‘சட்டத்துறையினர் மற்றும் நிர்வாக கட்டமைப்பில் பங்கேற்பாளர்கள் பலர் ஒரு தீர்ப்பை அது என்னவாக இருக்கிறதோஅதை மதிக்க வேண்டும். நீதிபதிகள் மாறிவிட்டார்கள் என்பதற்காக அதனை தூக்கி எறிந்துவிடக் கூடாது. நீதித்துறை நாட்டின் நிர்வாகத்திற்கு ஒருங்கிணைந்த நிறுவனமாகும்.

இந்தியர்களின் எதிர்காலம் தொடர்பான பல்வேறு கேள்விகளை தீர்ப்பதற்கு நீதிமன்றம் அடிக்கடி நாடப்படுகின்றது. மீறல்கள் ஏற்படும் போதெல்லாம் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் கடமையை நீதித்துறை கொண்டுள்ளது. நீதித்துறையின் சுதந்திரம் நீதிபதிகள் எழுதும் தீர்ப்புகள் மூலம் மட்டுமல்ல. அவர்களின் தனிப்பட்ட நடத்தை மூலமும் பாதுகாக்கப்படுகின்றது. நீதிபதியின் நடத்தை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக உணரப்பட வேண்டும். மேலும் ஒரு பாரபட்சமற்ற நீதித்துறை அமைப்புக்கு அரசியல் தனிமை அவசியமாகும்” என்றார்.

 

Tags : Supreme Court Justice Nagaratna ,New Delhi ,OP Jindal Global University ,Sonipat, Haryana ,Supreme Court ,Justice ,P.V. Nagaratna ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...