×

சூடு, சொரணை இருந்தால்… செங்கோட்டையனை கண்டித்து போஸ்டர்: ‘அதிமுகவே வேண்டாம் என்றால் ஜெயலலிதா படம் எதற்கு?’ என கேள்வி

 

திருப்புவனம்: சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையனை கண்டித்து அதிமுகவினர் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவர் விஜய் கட்சியில் இணைந்த பின்னரும், ஜெயலலிதா படத்தை சட்டைப்பையில் வைத்திருந்தது, தவெக கட்சி துண்டை போட மறுத்தது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், செங்கோட்டையனை கண்டித்து திருப்புவனம் உள்பட சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், ‘செங்கோட்டையனே… அடையாளம் தந்த அதிமுகவே வேண்டாம் என போன பிறகு எம்ஜிஆர், அம்மா படம் மட்டும் எதற்கு? சூடு, சொரணை இருந்தால் எம்ஜிஆர், அம்மா படத்தை பயன்படுத்தாதே…’ என பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சிவகங்கை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Sengottaiyan ,AIADMK ,Jayalalithaa ,Thiruppuvanam ,Sivaganga district ,Thaveka ,Tamil Nadu Victory Party ,Vijay Party… ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...