×

ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் துவக்கம்

 

சென்னை: ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியன் டூர் 4 போட்டிகள், சென்னையில் இன்று துவங்குகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இப்போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பங்கு பெறுகின்றனர். இந்தியாவை சேர்ந்த முன்னாள் உலக நம்பர் 10 வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, ஆடவர் பிரிவில் உலகின் 51ம் நிலை வீரர் வீர் சோத்ரானி, தமிழ்நாட்டை சேர்ந்த வேலவன் செந்தில்குமார், வீராங்கனை அனாஹத் சிங் உட்பட பலர் போட்டியில் வெல்லக் கூடியவர்களாக கருதப்படுகின்றனர். வரும் 9 முதல் 14ம் தேதி வரை, சென்னையில் எஸ்டிஏடி உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் செந்தில் குமார், அனாஹத், ஜோஷ்னா சின்னப்பா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,HCL Squash Indian Tour ,India ,India… ,
× RELATED லக்னோவில் கடும் பனிமூட்டம் காரணமாக...