×

காவிரி பாசன மாவட்டங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
டிட்வா புயல் காரணமாக காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்து வரும் மழையால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. எனவே டிட்வா புயல் காரணமாக மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Cauvery ,Anbumani ,Chennai ,Cyclone Titva… ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...