×

2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று காட்டுவோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: தனது கட்சியின் பெயரில் உள்ள திராவிடத்தை மறந்தவர் எடப்பாடி பழனிசாமி என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு வெல்லட்டும் சமூக நீதி நிகழ்ச்சிக்கு வந்திருப்பது சொந்த குடும்ப நிகழ்ச்சிக்கு வந்ததைபோல் உணர்கிறேன். திராவிடம் என்றாலே டெல்லியில் இருந்து உருட்டல் மிரட்டல்கள் வரும். நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டினால் இந்தியர்கள் எனக் கூறியவர் கலைஞர். அண்ணா, எம்.ஜி.ஆரை மறந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமியின் மனதில் நிறைந்திருப்பது எல்லாம் அமித் ஷாவின் பெயர்தான்.

பல கார்கள் மாறி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு, எடப்பாடி போல அமித் ஷாவை சந்தித்தார். ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்தவர், மற்றொரு கட்சியில் இணைந்துள்ளார். அமித் ஷாவிடம் அனுமதி கேட்டுவிட்டு இன்னொரு கட்சியில் அதிமுக மூத்த தலைவர் இணைந்துள்ளார். அதிமுகவில் யார் எந்த கட்சியில் சேர வேண்டும் என்பதை டெல்லியே முடிவு செய்கிறது. எஸ்.ஐ.ஆர். மூலம் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டவர்களின் வாக்குகளை பறிக்கப் பார்க்கிறது பாஜக.

எஸ்.ஐ.ஆர் மூலம் சிறுபான்மை மக்களை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது ஒன்றிய பாஜக அரசு. பாசிச பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றுவது நமது கடமை. 2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று காட்டுவோம் என்று கூறினார்.

Tags : DEPUTY ,ADAYANIDI STALIN ,Udayaniti Stalin ,Edappadi Palanisami ,Erode ,Delhi ,
× RELATED ஒன்றிய அரசின் அடுத்த இடி வர்த்தக...