×

2026ம் ஆண்டு மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கவும்: திருவள்ளூர் கலெக்டர் அறிக்கை

திருவள்ளூர்: “மீண்டும் மஞ்சப்பை” பிரசாரத்தை முன்னெடுத்துச்செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், 2022-23ம் நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தார்.

இதன்படி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்பட உள்ளது.

இதன்படி, முதல் பரிசாக ரூ.10 லட்சமும் 2ம் பரிசாக ரூ.5 லட்சமும் 3 ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.

இந்த விருதிற்கு www.tntiruvallurawards.com என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களில் மென் நகலுடன் 2 அச்சுப் பிரதிகள் மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைத்தளத்தில் இருந்து www.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர், அமைப்பு தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், 2 அச்சுப் பிரதிகள் மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15.1.2026. இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

Tags : Manjapai Award 2026 ,Thiruvallur ,Manjapai Again ,Minister for Environment and Climate Change ,Manjapai Awards ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...