×

அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா கோல் மழை இறுதிக்கு முன்னேற்றம்

இபோ: மலேசியாவில் நடந்து வரும் சுல்தான் அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி, கனடாவை 14-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மலேசியாவில் அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்தியா, மலேசியா, பெல்ஜியம், தென் கொரியா, நியூசிலாந்து, கனடா ஆகிய 6 நாடுகள் மோதுகின்றன.

ரவுண்ட் ராபின் முறையில் நேற்று நடந்த கடைசிப் போட்டியில் கனடாவுடன் மோதிய இந்தியா 14 கோல்கள் போட்டு அதகளம் செய்தது. கனடா வீரர்கள் 3 கோல்கள் மட்டுமே போட்டனர். அதனால், 14-3 என்ற கோல் கணக்கில் மகத்தான வெற்றியை பதிவு செய்த இந்தியா புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Tags : Azlan Shah Hockey India ,Ibo ,Canada ,Sultan Azlan Shah Cup ,Malaysia ,Azlan Shah Cup ,India ,
× RELATED மகளிர் டி20: இலங்கைக்கு எதிரான 3வது...