நாக்பூர்: நாக்பூரில் நேற்று நடந்த தேசிய புத்தக விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசியதாவது: மகாத்மா காந்தி எழுதிய ஹிந்த் ஸ்வராஜ் புத்தகத்தில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியர்கள் ஒன்றுபட்டிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. அது காலனித்துவ போதனையால் நமக்கு கற்பிக்கப்பட்ட தவறான கதை.
வெவ்வேறு ஆட்சிகளின் கீழும், அந்நிய ஆட்சியின் காலங்களிலும் கூட, இந்தியா எப்போதும் ஒரு தேசியமாக இருந்துள்ளது. நாம் அனைவரும் சகோதரர்கள். பாரத மாதாவின் குழந்தைகள். பன்முகத்தன்மை இருந்தபோதிலும், நாம் ஒற்றுமையாக இருக்கிறோம், ஏனெனில் அதுதான் நமது தாய்நாட்டின் கலாச்சாரம். நாங்கள் யாருடனும் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. சச்சரவு செய்வது நமது நாட்டின் இயல்பிலேயே இல்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
