- ஆதித்யா வர்மா
- இராணுவ பாதுகாப்பு ஆய்வு அமைப்பு
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு
- மைசூரு...
ஆல்வார்: திருமணம் முடிந்த 2 நாளில் ராணுவ விஞ்ஞானி மர்ம முறையில் பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானி ஆதித்ய வர்மா. மைசூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு நவம்பர் 25 அன்று திருமணம் நடந்தது.
நவம்பர் 27 ஆம் தேதி காலை, அவர் தனது வீட்டு கழிப்பறையில் மயக்க நிலையில் காணப்பட்டார். குடும்பத்தினர் அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். அவரது மரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
