படகு இல்லம், தாவரவியல் பூங்காவில் ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்த கோரிக்கை

ஊட்டி, ஜன. 11: ஊட்டி படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஊட்டி புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகிறார்கள். குறிப்பாக கோடை சீசன் சமயங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று பார்ப்பது வழக்கம். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் அதிகளவு பணம் எடுத்துவருதில்லை. பணம் தேவைப்படும் போது ஏ.டி.எம்., பயன்படுத்தி பணம் எடுத்து கொள்கின்றனர்.  சுற்றுலா பயணிகள் வந்து செல்ல கூடிய படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஏ.டி.எம்., வசதி இல்லை. இதனால் பணம் எடுப்பதற்காக சுற்றுலா பயணிகள் நகருக்குள் வர வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு படகு இல்லம், தாவரவியல் பூங்கா பகுதிகளில் ஏ.டி.எம்., வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>