×

சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது: வானிலை ஆய்வு மையம்!

 

சென்னை: சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை (30ம் தேதி) அதிகாலையில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் கரை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. இலங்கை அருகே டிட்வா புயல் உருவாகியுள்ளதை அடுத்து இலங்கையில் கடும் மழை பெய்து பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் அங்கு மழை நீடித்து வருகிறது. தரைப்பகுதியில் இருந்து டிட்வா புயல் கடல் பகுதிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரமாக 7 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்ந்து வருகிறது. நாளை அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை அருகே வங்கக்கடலை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Chennai ,Tidwa Storm Center ,Meteorological ,Meteorological Center ,Storm Tidwa ,Sri Lanka ,Tamil Nadu ,
× RELATED மகாராஷ்டிரா, குஜராத்தை பின்னுக்கு...