×

விபரீதத்தில் முடிந்தது இன்ஸ்டாகிராம் பழக்கம் கொடைக்கானல் சிறுமியை மணம் செய்து கத்தியால் குத்தி கொடுமை: சென்னை வாலிபர் போக்சோவில் கைது

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (22) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து சென்னையில் இருந்து கொடைக்கானல் வந்த சுதர்சன், அங்கு பெற்றோர் இல்லாத நேரத்தில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியுடன் அவரது வீட்டில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2023ல் திருவண்ணாமலை மாதுளம்பாடி கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற சுதர்சன், அங்கு அவருக்கு தாலி கட்டியுள்ளார். பின்னர் அதே கிராமத்தில் வீடு எடுத்து இருவரும் ஒன்றாக தங்கியுள்ளனர். மாயமான சிறுமியை தேடிய பெற்றோர், அவர் திருவண்ணாமலை மாதுளம்பாடி கிராமத்தில் இருப்பது தெரிய வரவே, அங்கு சென்று சிறுமியை மீட்டு கொடைக்கானல் அழைத்து வந்தனர்.

இதனிடையே, டூவீலர் திருட்டு வழக்கில் சென்னை போலீசார், சுதர்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி, திருப்பூருக்கு சென்று அங்கு தங்கி வேலைபார்த்து வந்துள்ளார். சிறையிலிருந்த வெளியே வந்த சுதர்சன், சிறுமி திருப்பூரில் இருப்பது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்று தன்னுடன் வருமாறு சிறுமியை அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுதர்சன், கத்தியால் சிறுமியின் உடலில் குத்தியும், தலையை சுவரில் முட்ட வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, திருப்பூர் சென்ற சிறுமியின் பெற்றோர், அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமியின் வீட்டுக்கு வந்த சுதர்சன், ‘நீ என்னுடன் வரவேண்டும். இல்லையென்றால் உன்னையும், உனது தாயாரையும் கொன்று விடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சுதர்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Instagram ,Chennai ,Boxo ,Kodaikanal ,Dindigul district ,Godaikanal ,Sudharsan ,Chennai Mukapere ,Facebook ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...