- காங்கிரஸ்
- ராமச்சந்திர குன்ஷியா
- ஐயா
- சென்னை
- சங்கதன் ஸ்ரீஜன் அபியான்
- அகில இந்திய காங்கிரஸ் கட்சி
- காங்கிரஸ் கட்சி
- காங்கிரஸ் கட்சியின்…
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையிலும், காங்கிரஸ் கட்சியில் முறையாக பணியாற்றும் மாவட்ட தலைவர்களை நியமிக்கவும் சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டம் தொடங்ககப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்கான சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்ட ஆலோசனை கூட்டம், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று நடந்தது. வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் நடந்தது. இதில் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ராமச்சந்திரா குன்ஷியா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். குன்ஷியா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பீகார் தேர்தலின்போது எஸ்ஐஆர் மூலம் நடந்த மோசடி குறித்து ராகுல்காந்தி ஏற்கனவே எடுத்துரைத்துவிட்டார். அவருடைய வழியில் நாங்கள் எஸ்ஐஆரை முழுமையாக எதிர்க்கிறோம்’’ என்று கூறினார்.
