×

கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை

தி.மலை: கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளான 2025-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 03-ம் நாள் புதன்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ம் நாளை உள்ளூர் விடுமுறையாக அனுபவிக்கும் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து அலுவலகங்களும் மேற்படி அறிவிக்கப்பட்ட உள்ளுர் விடுமுறைக்கு பதிலாக 2025 ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13 ஆம் நாள் சனிக்கிழமை அன்று இயக்கும். மேலே அறிவிக்கப்பட்ட உள்ளுர் விடுமுறை தினம் மாற்றியல் தாள்முறி சட்டம் 1881 (மத்திய சட்டம் XXVI / 1881) ன் கீழ் வரும் பொது விடுமுறை இல்லை என்பதால், 2025ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 03 ஆம் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvannamalai ,Karthikai Deepat Festival ,Thiruvannamalai ,governor ,K. ,Tharpukaraj ,Kartikai Maha Deepat Festival Day ,Arunasaleswarar Temple, Tiruvannamalai District, Tiruvannamalai City ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை...