டெல்லி: அன்புமணி தலைவர் இல்லை என ராமதாஸ் அளித்த மனுவை ஆணையம் நிராகரித்துவிட்டது என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். அன்புமணி பதவிக்காலம் 2026 வரை உள்ளது என கூறிய தேர்தல் ஆணையம் மோசடி செய்துள்ளது. ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான கட்சி. போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அன்புமணி தரப்பு கொடுத்துள்ளது. போலியான பொதுக்குழுவை நடத்தியது கட்சியை திருடியதற்கு ஒப்பானது. தேர்தல் ஆணையம் செய்தது ஜனநாயகப் படுகொலை.
அன்புமணி செய்தது கட்சி திருட்டு நடவடிக்கை ஆகும். தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். போலி ஆவணங்களை அளித்த அன்புமணி மீது வழக்குப் பதிந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணி தரப்புக்கே பாமக என்ற தேர்தல் அணையத்தின் முடிவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை கண்டித்து டெல்லியில் பாமக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் கூறினார்.
