ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் வெங்கடபதி ராஜூ கூறியதாவது: பொறுமை என்பது ஒரு சுழற்பந்து வீச்சாளரின் மிக முக்கியமான குணம். துரதிர்ஷ்டவசமாக, நமது சுழற்பந்து வீச்சாளர்களிடையே அது காணாமல் போய்விட்டது. ஒயிட்பால் கிரிக்கெட் தாக்கத்தால் உள்நாட்டுப் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் போதுமான அளவு பந்து வீசுவதில்லை. சுழற்பந்து வீச்சாளர் வயதுக்கு ஏற்ப மட்டுமல்ல, அவர் வீசும் ஓவர்களிலும் முதிர்ச்சியடைகிறார். நீண்ட நேரம் பந்து வீசும்போது, முதிர்ச்சியடைந்து பொறுமையை வளர்த்துக் கொள்கிறீர்கள். இது முற்றிலும் அவசியம்.
வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் போன்ற ஆல்ரவுண்டர்கள் ஒயிட்பால் கிரிக்கெட்டில் சிறப்பாகவும் திறமையாகவும் செயல்பட்டுள்ளனர். ஆனால் சிவப்புப் பந்து கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, உள்நாட்டு சுற்றுகளில் இதுபோன்ற பிட்ச்களில் அவர்களுக்கு அனுபவம் இல்லை, முதிர்ச்சி அடையவில்லை, என்றார்.
