சென்னை: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த கௌதம் என்பவரிடம் ரூ.62.5 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தியபோது கல்லூரி மாணவர் கௌதமிடம் இருந்து ரூ.82.5 லட்சம் கண்டுபிடிப்பு. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.62.5 லட்சத்தை வருமான வரித் துறையினரிடம் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஒப்படைத்தனர்.
