×

ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலை.யில் எந்த பாகுபாடும் காட்டவில்லை; புறக்கணிக்கவில்லை: செழுமையாக வளர்த்துள்ளோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலை.யில் எந்த பாகுபாடும் காட்டவில்லை; புறக்கணிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (28.11.2025) காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் மு.க.ஸ்டாலின் பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகர் சிவகுமாருக்கும், ஓவியர் குருசாமி சந்திரசேகரனுக்கு வாழ்நாள் சாதனைக்காக முனைவர் பட்டங்களையும் வழங்கிச் சிறப்பித்தார். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக இணை வேந்தர் சாமிநாதன் , துணை வேந்தர் சீ.சௌமியா, ஆட்சிமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள். அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இவ்விழாவில் 1.846 மாணவர்களுக்கு கவின் கலைகளில் பட்டங்களையும் வழங்கி விழாப் பேருரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர்.

பெயர் சூட்டப்பட்ட பல்கலை.யில் எந்த பாகுபாடும் காட்டவில்லை

ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலை.யில் எந்த பாகுபாடும் காட்டவில்லை; புறக்கணிக்கவில்லை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கவில்லை; 2021ம் ஆண்டுக்கு பிறகு இந்த பல்கலைக்கழகத்தை இன்னும் செழுமையாக வளர்த்துள்ளோம்.

பல்கலை. வேந்தராக மட்டுமல்ல கலைஞன் என்ற முறையில் வந்துள்ளேன்: முதல்வர் ஸ்டாலின்

பட்டம் பெற்றவர்களை ‘மாணவர்கள்’ என்று அழைப்பதை விட பட்டம் பெற்ற ‘கலைஞர்கள்’ என அழைப்பதே பொருத்தமானது. பல்வேறுத் துறையில் சிறந்து விளங்கபோகும் கலைஞர்களுக்கும எனது மனமார்ந்த வாழ்த்துகள். குறிப்பாக அதிகமான பெண்கள் பட்டம் பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விழாவில் முதலமைச்சராகவும், பல்கலைக்கழக வேந்தராகவும் மட்டுமல்லாமல், நாடகம் மற்றும் திரைத்துறையில் பணியாற்றிய ஒரு கலைஞன் என்ற முறையிலும் பங்கேற்றதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்!

கலைஞர்களை போற்ற வேண்டியது ஒரு நல்ல அரசின் கடமை

கலைகள், கலைஞர்களை போற்ற வேண்டியது ஒரு நல்ல அரசின் கடமை.நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கும் விதமாக மதுரை வலையங்குளத்தில் பயிற்சி பள்ளி அமைக்கப்படும்.

கவின் கலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்க நடவடிக்கை

இசை, கவின் பல்கலை. நிர்வாகத்திறனை மேம்படுத்த ஊதியம், நிர்வாகச் செலவுத் தொகை ரூ.5 கோடியாக உயர்வு. கவின் கலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

 

Tags : University ,Jayalalitha ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Dr. ,J Jayalalitha ,University of Music and Gavin Arts of ,Tamil ,Nadu ,Chennai Kalaivanar Arena ,
× RELATED மகாராஷ்டிரா, குஜராத்தை பின்னுக்கு...