×

Dude திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இளையராஜா பாடல்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: Dude திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இளையராஜா பாடல்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியான Dude திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான புது நெல்லு, புது நாத்து திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த கருத்த மச்சான் என்ற பாடல். அதே போல் பணக்காரன் படத்தில் இடைபெற்றிருந்த நூறு வருஷம் என்ற 2 பாடல்கள் தனது அனுமதியின்றி உருமாற்றி பயன்படுத்தி உள்ளதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இரண்டு பாடல்களையும் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும். மேலும் அதை நீக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி செந்தில்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது இளையராஜா தரப்பில் தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் பாடல்களை பயன்படுத்தி உள்ளதாகவும், பாடலை உருமாற்றி உள்ளதாகவும், பாடல்களை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டது. Dude திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் பாடலுடைய உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும், சோனி நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்று இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இளையராஜா பாடல்களை உருமாற்றி பயன்படுத்தி உள்ளதற்கு முகாந்திரம் உள்ளது. அவருடைய பாடல்களை புனிதத்திற்கும், அவரது நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி Dude படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் அந்த பாடல்களை நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அப்போது பட தயாரிப்பு நிறுவனம் இதற்கு 7 நாட்கள் கால அவகாசம் வேண்டும்.

ஏனென்றால் இவை ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது. எனவே அதனை முழுமையாக எடிட் செய்து போட வேண்டும் என்றால் 7 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு நீதிபதி அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லீ என்ற திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களை நீக்க இதே நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : High Court ,Chennai ,Chennai High Court ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்