- கோசஸ்தலை நதி
- திருவள்ளூர்
- பூண்டி நீர்த்தேக்கம்
- டிட்வா புயல்
- வங்காள விரிகுடா
- வளிமண்டலவியல் திணைக்களம்
- திருவள்ளூர் மாவட்டம்
- சென்னை
திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கை காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டிருக்கிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக எச்சரிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சென்னை குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ள பூண்டி அணையில், சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கான நிலவரப்படி 790 கனஅடியானது நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. மேலும் மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரிக்கும் கூடும் என்பதால் அணை பாதுகாப்பு கருதி நேற்றைய தினம் 200 கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு 10 மணியளவில் 1,300 கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக 30 கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள எச்சரிக்கையானது விடுக்கப்பட்டது. நந்தனம், தாம்பரம், எண்ணூர் உள்ளிட்ட கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள 30 கிராம மக்களுக்கு எச்சரிக்கையானது நீர்வளத்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்று பகுதியில் இறங்கவோ, குளிக்கவோ, துணிதுவைக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி பூண்டி நீர்த்தேக்கத்தில் 3,231 மில்லியன் கன அடியில் இருந்து 2810 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அதைப்போன்று 35 அடி நீர்மட்ட கொண்ட இந்த நீர்தேக்கத்தில் தற்போது 33.96 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது.
