×

திருவாரூரில் போலி சிலைகளை விற்க முயன்ற வங்கி ஊழியர் கைது

திருவாரூர் : திருவாரூர் தாலுகா பழவனக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் தமிழரசன்(40). திருவாரூர் நேதாஜி சாலையில் இயங்கி வரும் தேசிய வங்கி கிளை ஒன்றில் இளநிலை உதவியாளராக தற்காலிகமாக பணியாற்றி வரும் இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலைக்கு சென்றார். அப்போது அங்கு பித்தளையால் செய்யப்பட்ட நடராஜர் மற்றும் சிவகாமி தாயார் சிலைகளை ரூ.75 ஆயிரம் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

பின்னர் அந்த சிலைகளை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கும் வகையில் சிலைகள் மீது முலாம் பூசி, பூமியிலிருந்து புதையல் மூலம் எடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த சிலைகள் என்று தனது வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் தகவல் பரப்பியுள்ளார்.

இந்த தகவல் தெரிய வந்த திருவாரூர் டவுன் போலீசார், தமிழரசனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவை போலியான சிலைகள் என்றும், சுவாமிமலையில் வாங்கப்பட்டது என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தமிழரசனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரிடம் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ேமலும் அவரிடமிருந்து போலி சிலைகளையும் போலீசார் மீட்டனர்.

Tags : Thiruvaroor Thiruvarur ,Tamilharasan ,Taluga Phavanakudi ,Thiruvaroor ,National Bank ,Thiruvarur Netaji Road ,Swami ,Thanjavur ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...