- சூறாவளி
- டிட்வா
- புதுக்கோட்டை
- மயிலாடுதுறை
- திருவாரூர்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- தென்மேற்கு வங்காள விரிகுடா...
டிட்வா புயல் காரணமாக புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயல் உருவானதாக வானிலை மையம் அறிவித்தது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. டிட்வா புயல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் புயலானது வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். 30ம் தேதி அதிகாலை வடதமிழ்நாட்டின் கடலோர பகுதியில் டிட்வா புயல் நிலவும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இதையடுத்து மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கடலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவித்து ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே தொடர் மழை காரணமாக ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 530 கி.மீ தூரத்தில் தெற்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. டிட்வா புயல் நகரும் வேகம் அதிகரிக்கும். 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயலின் வேகம் அதிகரித்துள்ளது எனவும் புதுச்சேரியில் இருந்து 430 கி.மீ தெற்கு, தென்கிழக்கில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
