விழுப்புரம்: விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நேற்று தடையை மீறி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி தலைமையில் நடந்தது. இதில், சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சி.வி.சண்முகம் மற்றும் 31 பெண்கள் உள்பட 215 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
