- காங்கிரஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராமச்சந்திர குன்ஷியா
- சென்னை
- அகில இந்திய காங்கிரஸ் கட்சி
- காங்கிரஸ் கட்சி
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்தும் வகையிலும், காங்கிரஸ் கட்சியில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட தலைவர்களை நியமிக்கவும் சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டம் துவக்கப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டத்திற்கான சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்ட ஆலோசனை கூட்டம் நேற்று பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டெல்லி பாபு தலைமையில் நடந்தது.
ஒருங்கிணைந்த வடசென்னை பார்வையாளராக நியமிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த ராமச்சந்திரா குன்ஷியா இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மேலிட பொறுப்பாளர் ராமச்சந்திரா குன்ஷியா பேசுகையில்,‘ தற்போது இருக்கும் மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து 3 மாத காலம் ஆய்வு செய்யப்படும். பின்னர் முறையாக பணியாற்றாத மாவட்ட தலைவர்கள் மாற்றப்படுவது மற்றும் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,’என்றார்.
