×

மழையால் பாதிப்பு; பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மனு

திருவாடானை,நவ.27: திருவாடானை தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. திருவாடானை பகுதிகளில் மழையால் நீரில் மூழ்கி அழிந்து போன நெல் விவசாயத்திற்கு நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் முத்துராமன் தலைமையில், திருவாடானை தாசில்தார் அமர்நாத்திடம் மனு கொடுக்கப்பட்டது.

இதில் கடந்த செப்டம்பர் கடைசி அக்டோபர் முதல் வாரத்தில் பெய்த தொடர் மழையால் மங்களக்குடி புல்லூர், திருவாடானை உள்வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மழைநீரால் பயிர்கள் முளைத்து 30 நாட்கள் ஆன நிலையில் தண்ணீரில் மூழ்கி அழுகி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயத்திற்கு ரூ.15,000 வெள்ள நிவாரணம் வழங்கிட வேண்டி தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கும் விதமாக திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அமர்நாத்திடம் மனு கொடுத்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvadanaai ,Tahsildar ,Tamil Nadu Farmers' Association ,Thiruvadanaai taluka ,Tamil Nadu… ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்