பந்தலூர், நவ.27: நெல்லியாளம் நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் பதவி பிரமானம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகர்மன்ற தலைவர் சிவகாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் சத்திவேல் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி நெல்லியாளம் நகராட்சியின் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக தேவாலா போக்கர் காலணியை சேர்ந்த உம்மர் ஆனையாளர் சத்திவேல் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
இவருக்கு தலைவர் மற்றும் கவுன்சிலரும் நெல்லியாளம் நகர கழக செயலாளருமான சேகர், கவுன்சிலர்கள் ஆலன், புவனேஷ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பிற கவுன்சிலர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் அடிப்படை வசதிகளான குடிநீர், நடைபாதை, தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. கவுன்சிலரின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் மற்றும் தலைவர் ஆகியோர் தெரிவித்தனர் இறுதியாக துணை தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.
