×

வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி; மாணவன் கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை

கோவை, நவ.27: கோவை ஒண்டிப்புதூரில் 2 ஆண்டுக்கு முன்பு நடந்த மாணவன் கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (68). லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மகன் பிரணவ் (17). இவர் கடந்த 2024ம் ஆண்டு சின்ன வேடம்பட்டியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது சக மாணவி ஒருவர் பிரணவ்வை கேலி, கிண்டல் செய்துள்ளார். இதனால் பிரணவ்வுக்கும், அந்த மாணவிக்கும் தகராறு ஏற்பட்டது. இது அதே பள்ளியில் படிக்கும் மாணவியின் 17 வயதான சகோதரனுக்கு தெரியவந்தது.

அடிக்கடி பிரணவ் மற்றும் மாணவியின் சகோதரர் மோதிக்கொண்டனர். இந்நிலையில், கடந்த 17-2-2024ம் ஆண்டு காலையில் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பேக்கரி முன்பு பிரணவ்வை, அந்த மாணவியின் சகோதரர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை சிறார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருண் ராஜ்குமார், கொலை வழக்கில் 17 வயது சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : -Violence Day ,Coimbatore ,Ondipudur, Coimbatore ,Prakash ,Nanjappa Street, Ondipudur, Coimbatore ,
× RELATED மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் ரூ.3.40 கோடியில் மினி விளையாட்டு மைதானம்