- சென்னை
- 82 வது மாநில நிர்வாகக் குழு கூட்டம்
- தமிழ்நாடு மின்சக்தி தொழிலாளர்கள் மேம்ப
- ராமம்பூர், சென்னை
- மணிமாறன்
- பொது செயலாளர்
- வேளாண் அமைச்சகம்
- அனைத்து
- இந்தியா
- சன்முகம்
- சபை
- நடராஜன்
- அஹலர் வல்லுவன்
சென்னை: சென்னை எழும்பூரில் தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் 82வது மாநில செயற்குழு கூட்டம் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிமாறன் முன்னிலையில் நடைபெற்றன. இதில் அகில இந்திய தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், பேரவை தலைவர் நடராஜன், பொருளார் வள்ளுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளை சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு கால அவகாசம் வழங்கி, படிவம் நிரப்பும் வழிமுறையை எளிமைப்படுத்தி பின்னர் பணிகளை தொடர வேண்டும். ‘கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, விடுபட்ட கேங்மேன்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம், கொரோனா, பேரிடர் காலத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிய மின்வாரிய தொழிலாளர், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 2023 டிச.1 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வினை வழங்க வேண்டும் என்பது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
