×

‘நாங்கள் நடத்துவது சினிமாக்கார தற்குறிகள் மாநாடாக இருக்காது’

பரமக்குடி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நேற்றுமாலை நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘2026 சட்டமன்றத் தேர்தலில் சீமான் ஆட்டத்தை அனைவரும் பார்க்க போகிறீர்கள். வரும் பிப். 7ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாடு சினிமாக்கார தற்குறி நடத்தும் மாநாடு அல்ல. தன்மானம் மிக்கவர்களின் தலைவன் நடத்தும் மாநாடு. மாநாட்டிற்கு வரும் கூட்டத்தை வைத்து, நாம் தமிழர் கட்சி யார் என்பது தெரிய வரும்’’ என்றார். பின்னர் சீமான், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘செங்கோட்டையன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை’’ என்றார்.

Tags : Paramakudi ,Tamil Party ,Chief Coordinator ,Seaman ,Ramanathapuram District ,2026 Assembly elections ,Conference on Cinematography ,Trischi ,
× RELATED இந்தூர் குடிநீர் விவகாரத்தில் 15 பேர்...