×

கர்நாடகா முதல்வர் பிரச்னை சோனியா, ராகுலுடன் பேசியபின் தீர்க்கப்படும்: கார்கே அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. முதல்வர் பதவியை கேட்டு டி.கே.சிவகுமாரும், முதல்வர் பதவியை தக்கவைக்க சித்தராமையாவும் தீவிரம் காட்டிவரும் நிலையில், கட்சித் தலைமைக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் முடிவெடுக்க முடியாமல், கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று கூறியிருந்த கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார். இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில் சித்தராமையா ஆதரவு அமைச்சரான சதீஷ் ஜார்கிஹோளி, கடந்த செவ்வாய் இரவு டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசியிருந்தார். டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்துவிட்டு வந்த அமைச்சர் பிரியாங்க் கார்கேவும் நேற்று டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசினார்.

Tags : Karnataka ,Sonia ,Rahul ,Kharge ,Bengaluru ,DK Shivakumar ,Siddaramaiah ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...