×

17 ஆண்டுக்கு பின் ஏஐ உதவியால் குடும்பத்துடன் சேர்ந்த பாக். இளம்பெண்

கராச்சி: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கடந்த 2008ம் ஆண்டு கிரண் என்ற சிறுமி கடைக்கு வந்தபோது வீட்டுக்கு திரும்பி செல்ல வழி தெரியாமல் அழுது கொண்டிருந்ததாக தெரிகின்றது. கிரணை மீட்ட பெண் இஸ்லாமாபாத்தில் உள்ள எதி என்ற அறக்கட்டளையில் சேர்த்துள்ளார். இந்நிலையில் சைபர் பாதுகாப்பு நிபுணரான நபீல் அகமதுவிடம் கிரணின் சமீபத்திய புகைப்படம் மற்றும் அவளது சிறுவயது பருவம் மற்றும் சுற்றுப்புறம் குறித்த தகவல்களை வழங்கியுள்ளனர். நபீல் அந்த ஆண்டில் காணாமல் சென்ற சிறுமி குறித்த காவல்துறை புகாரை கண்டறிந்தார். மேலும் சமீபத்திய ஏஐ தொழில்நுட்பம், முக அங்கீகார மென்பொருளை பயன்படுத்தி சிறுமியின் குடும்பத்தை கண்டுபிடித்தார். பின்னர் கிரணின் தந்தை அப்துல் மஜீத் கராச்சிக்கு வந்து மகளை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தார்.

Tags : Karachi ,Kiran ,Islamabad, Pakistan ,Edhi ,Islamabad ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...