புழல், நவ.27: புழலில் சிஏ தேர்வில் ஒரு மார்க் குறைவாக வந்ததால், மனவேதனையில் பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். புழல் அடுத்து லட்சுமிபுரம், மகாலட்சுமி நகர், பச்சையப்பன் காலனியை சேர்ந்தவர் சுந்தர் (34). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். படிப்பின்மேல் அதிக ஆர்வம் கொண்ட இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிஏ தேர்வு எழுதி முடித்துள்ளார். அத்தேர்வின் முடிவில் ஒரு மார்க் குறைவாக வரவே, சுந்தர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அறையில், பேனில் நைலான் கழித்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து, தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீசார், சுந்தரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
