×

சின்னமனூர் யூனியனில் பாரபட்சம் இல்லை திமுக மீது களங்கம் கற்பிக்க முயற்சி அதிமுக கவுன்சிலர்கள் மீது யூனியன் தலைவர் குற்றச்சாட்டு

சின்னமனூர், ஜன. 11: சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து, திமுக மீது களங்கம் கற்பிக்க முயற்சி செய்கின்றனர், யூனியன் தலைவர் நிவேதா அண்ணாத்துரை குற்றம்சாட்டியுள்ளனர்.
சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக கவுன்சிலர்கள் 6 பேர், அதிமுக கவுன்சிலர்கள் 4 பேர் என மொத்தம் 10 பேர் உள்ளனர். ஒன்றியத் தலைவராக திமுகவைச் சேர்ந்த நிவேதா அண்ணாத்துரை, துணைத் தலைவராக ஜெயந்தி சிவக்குமார் உள்ளளர். இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த 4வது கூட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர். இந்நிலையில் ஒன்றிய தலைவர் நிவேதா அண்ணாத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எரணம்பட்டி பஞ்சாயத்தில் கழிவுநீர் கால்வாய் மராமத்து பணி செய்யாமல் இருந்தது. இப்பணிக்காக கிராம ஊராட்சி தலைவர் தீர்மானம் நிறைவேற்றி நகலையும் இணைத்து மனுவாக அளித்தார். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உண்மைதான் என உறுதி செய்ததற்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் செய்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில், சாதாரண கூட்டத்திற்கு வந்து 15வது நிதிக்குழு என அதிமுகவினர் வர்ணம் பூசி, பணிகள் செய்ய நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் என வெளிநடப்பு செய்து, பொதுமக்களிடம் திமுக மீது களங்கம் கற்பிக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், திமுக ஒன்றிய தலைவராக உள்ள நான் விருப்பு வெறுப்பின்றி, பாரபட்சமில்லாமல் அடிதட்டு மக்களும் பயன்பெறும் விதமாக மன்றத்தை செயல்படுத்துவோம் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : AIADMK ,councilors ,DMK ,
× RELATED விலவூர் பேரூராட்சியில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்