பாஜக சாலை மறியல்

உசிலம்பட்டி, ஜன.11: பாஜக கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து உசிலம்பட்டியில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டியில் பாஜகவினர் நேற்று தேவர்சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை கருப்பாயூரணியிலுள்ள பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மாவட்டத் தலைவர் மகாசுசீந்திரன் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்ததை கண்டித்தும் கட்சியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட செயலாளர் சொக்கநாதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பி ராஜன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர். திருமங்கலம் கள்ளிக்குடி ஒன்றிய பாஜகவினர் நான்கு வழிச்சாலையில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய தலைவர் சரவணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>