ஊட்டி, நவ.26: நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்(எஸ்ஐஆர்) குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் உள்ள ஜெஎஸ்எஸ். பார்மசி கல்லூரியில் எஸ்ஐஆர் குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், மாணவர்கள் எஸ்ஐஆர்., என்ற எழுத்துக்கள் போல் நின்று பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், இது போன்று மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட எஸ்ஐஆர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
