×

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

ஊட்டி, நவ. 26: ஊட்டி ஏடிசி., பஸ் நிலையத்தில் அரசின் சாதனை மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது. இதனை பொதுமக்கள் மற்றும் பயணிகள் கண்டு பயன் அடைந்தனர். திமுக., தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்றவுடன், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரத்தை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கினார். மேலும், 14 வகையான மளிகை தொகுப்புகள் ரேசன் கடை மூலம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளை பரிசீலனை செய்யப்பட்டு, கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட்டது. இதுதவிர மக்களை தேடி மருத்தவ திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், மகளிருக்கு அரசு பஸ்களில் இலவச பயணம், பள்ளி மாணவிகள் உயர் கல்வி படிப்பதற்காக ரூ.1000 வழங்கும் திட்டம், குழந்தைகளின் கற்றல் குறைபாடுகளை களைய இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், காலை சிற்றுண்டி திட்டம், உங்களுடன் ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவம் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டியில் உள்ள ஏடிசி., பஸ்நிலையத்தில், புகைப்பட கண்காட்சி நடந்தது. இதனை பொதுமக்கள் மற்றும் பயணிகள் கண்டு அரசின் திட்டங்களை அறிந்து கொண்டனர்.

Tags : Ooty ,Ooty ATC ,DMK ,Stalin ,Chief Minister… ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...