×

கணவர் சித்ரவதை ரூ.50 கோடி கேட்டு நடிகை செலினா ஜெட்லி வழக்கு

மும்பை: நடிகையும் முன்னாள் மிஸ் இந்தியாவுமான செலினா ஜெட்லி ஏராளமான இந்தி படங்களில் நடித்துப் பிரபலமடைந்தார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பீட்டர் ஹாக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், பிரச்னைகள் காரணமாகத் தனது கணவர் பீட்டர் ஹாக் மீது குடும்ப வன்முறை வழக்கு தொடர்ந்த செலினா, 50 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னி நகரில் கணவருடன் வசித்த செலினா ஜெட்லி, சொல்ல முடியாத துயரத்தில் தான் இருப்பதாகவும் தினமும் கணவர் தன்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதாகவும் புகார் கூறியுள்ளார். மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள அவர், தான் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.50 கோடி இழப்பீடை பீட்டர் ஹாக் வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி பீட்டர் ஹாக்கிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Selena Jedley ,Chitrawat ,Mumbai ,India ,Peter Hawke ,Australia ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...