புதுடெல்லி: குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் சமூக, பொருளாதார அடிப்படையில் புறக்கணிப்புக்குள்ளாவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், ‘‘இந்த மனுவுக்காக தனியாக சட்டம் இயற்ற முடியாது. ஒவ்வொரு விஷயத்தையும் கண்காணிக்க நாங்கள் விரும்பவில்லை. சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள உயர் நீதிமன்றங்கள் உள்ளன. காவல் நிலையங்கள் உள்ளன. அங்கு செல்லுங்கள். முதலில் காவல் துறையிடம் அணுகி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்திற்கு வாருங்கள். நாடு முழுவதும் இதுபோன்ற அனைத்து நிகழ்வுகளையும் இந்த நீதிமன்றம் எவ்வாறு கண்காணிக்க முடியும்’’ என்றனர்.
