புதுடெல்லி: ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்புகளை வழங்கும் நோக்கத்துடன், ஒன்றிய அரசு கடந்த 2019ல் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் ஆரம்ப செலவு ரூ.3.60 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் அதற்கான செலவு ஏற்கனவே ரூ.4.33 லட்சம் கோடியை தாண்டிவிட்டது.
செயல்படுத்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகார்களால் நாடு முழுவதிலுமிருந்து வந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை எடுத்து மாநிலங்களுக்கு ரூ.129.27 கோடியை அபராதம் விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. அதிகபட்சமாக குஜராத் மாநிலத்திற்கு ரூ.6.65 கோடி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரிபுரா (ரூ.1.22 கோடி), அசாம் (ரூ.5.08 லட்சம்), மகாராஷ்டிரா (ரூ.2.02 கோடி), கர்நாடகா (ரூ.1.01 கோடி) மற்றும் ராஜஸ்தான் (ரூ.5.34 கோடி) உள்ளிட்ட மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
