×

புர்கா அணிய தடை கோரி போராட்டம் ஆஸி. நாடாளுமன்றத்தில் புர்கா அணிந்து வந்த எம்பி சஸ்பெண்ட்

மெல்போர்ன்: புர்கா அணிய தடைக்கோரி பிரசாரம் செய்து வரும் எம்பி, புர்கா அணிந்து வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவில் முஸ்லிம் எதிர்ப்பு, குடியேற்ற எதிர்ப்பு ஒன் நேஷன் மைனர் கட்சியின் தலைவரான பவுலின் ஹான்சன்(71) பொது இடங்களில் இஸ்லாமியர்கள் புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார். புர்காவுக்கு தடை விதிக்கக் கோரும் மசோதாவை கொண்டு வந்தார். ஆனால் இதனை ஏற்க நாடாளுமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் புர்கா அணிவதற்கு தடை விதிக்க கோரும் வகையில் அவர் தலை முதல் பாதம் வரை மறைக்கும் வகையில் புர்கா அணிந்தபடி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

எம்பி ஹான்சனின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனினும் ஹாசன்சன் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரவில்லை. இதனை தொடர்ந்து எம்பி பவுலின் ஹான்சனை சஸ்பெண்ட் செய்து நேற்று நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Tags : Aussie ,Melbourne ,Pauline Hanson ,anti ,Muslim ,Nation Minority Party ,Australia ,
× RELATED பதவியேற்ற ஓராண்டில் 8 போர்களுக்கு...