பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் ரூ. 900 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சிகம் லூவ்ரே. இங்கு பேரரசி மேரி-லூயிஸுக்கு நெப்போலியன் கொடுத்த வைரம் மற்றும் மரகத நெக்லஸ், 19 ஆம் நூற்றாண்டின் ராணிகள் மேரி-அமெலி மற்றும் ஹார்டென்ஸுடன் கட்டப்பட்ட நகைகள், பேரரசி யூஜெனியின் முத்து மற்றும் வைர தலைப்பாகை ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.
அக்.19 அன்று இங்கு கிரேன் மூலம் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் மன்னர் நெப்போலியன் காலத்து கிரீடம் மற்றும் பிரெஞ்சு ராணிகள் அணிந்த நெக்லஸ் உட்பட 8 விலை உயர்ந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.909 கோடி ஆகும். இந்த கொள்ளையில் தொடர்புடையவர்களை பாரிஸ் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 2 பெண்களும் அடங்குவர். அவர்கள் 31 முதல் 40 வயதுடையவர்கள். இந்த கொள்ளையில் கடந்த அக்டோபர் மாதம் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
