விருதுநகர்: விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் ஏட்டாக பணியாற்றியவர் சுந்தர்ராஜ். இவர் ஆபாசமாக படம் எடுத்து ரூ.87 லட்சத்தை பறித்ததாகவும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் ஒரு பெண் புகாரளித்தார். இதையடுத்து, அவர் நெல்லைக்கு மாற்றப்பட்டு, மீண்டும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார். இவர் மீதான புகார் உண்மை என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏடிஜிபிக்கு அறிக்கையளித்தனர். இதனிடையே அவர் மீது மேலும் சிலர் மோசடி மற்றும் பாலியல் புகார்களை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், காவல்துறை பணி மற்றும் கட்டுப்பாட்டு விதிகளை மீறி ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறி சுந்தர்ராஜை சஸ்பெண்ட் செய்து எஸ்பி கண்ணன் நேற்று உத்தரவிட்டார்.
