சென்னை: சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025 டிசம்பர் எம்.எல். தனித்தேர்வு (அரியர்) அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. விண்ணப்ப படிவத்தை www.unom.ac.in பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராத கட்டணம் செலுத்தி டிசம்பர் 10ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
